கார்த்தியின் தேவ் டீசருக்கு நல்ல வரவேற்பு !

திங்கள், 5 நவம்பர் 2018 (15:06 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக  ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன்  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். சமீபத்தில்  தேவ் படத்தின்  புகைப்படங்கள் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது தேவ் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிகர் கார்த்தி கிராமத்து இளைஞராக வாழ்ந்தார்.  தேவ் படத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் நகரத்து இளைஞராக நடித்து உள்ளார். வரும் டிசம்பர் மாதத்தில் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்